கன்னியாகுமரியில் ரூ.11.44 கோடி செலவில் கட்டப்பட்ட முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கான வீடுகள் இன்று திறப்பு
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி பகுதியில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.11.44 கோடி செலவில் கட்டப்பட்ட 172 புதிய வீடுகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, நாசர் ஆகியோர் இன்று திறந்து வைக்கின்றனர். மேலும், 90 புதிய வீடுகள் கட்டவும் இன்று அடிக்கல் நாட்டப்பட உள்ளது.


