கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதாகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவை கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுவதாகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சாதாரணக் கட்டணம் ரூ.75ல் இருந்து ரூ.100ஆகவும், மாணவர் கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.40ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்புக் கட்டணத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


