ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை: முதல்வர் உத்தரவு
சென்னை: ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளது. ஜம்முவில் இருந்து மாணவர்கள், மக்கள் வெளியேறி வருகின்றனர். நிலைமை சீரானதும் தமிழக மாணவர்கள் பத்திரமாக தமிழகம் அழைத்து வரப்பட உள்ளனர் என்று அயலக தமிழர் நல வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
