சென்னை: பொதுச்செயலாளர் குறித்த வழக்கு நிலுவையில் உள்ள போது அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் என்று மனுத்தாக்கல் செய்த பழனிசாமி தற்போது பொதுச்செயலாளர் என்று பதில் மணு தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி மனுத்தாக்கல் செய்ததற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. திருத்த மனுத் தாக்கல் செய்ய எடப்பாடிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஐகோர்ட் ஆக.7-க்கு ஒத்திவைத்தது.
+
Advertisement

