Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்

கரூர்: நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்த வழக்கில் 35 நாட்களாக தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 16-ல் கைது செய்யப்பட்டார். கேரளாவில் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், வாங்கல் காவல் நிலையத்தில் பதியப்பட்ட மற்றொரு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். வாங்கல் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.