கோவை: கோவையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்து மோசடி செய்ததாக மேலும் ஒரு மோசடி வழக்கு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி பேருந்து வாங்கியதில் மோசடி செய்ததாக ஆற்றல் அசோக்குமார் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. 3,000 பெற்றோர்களிடம் ஆற்றல் அசோக்குமார் ரூ.40 கோடி வசூலித்ததாக கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் மாணவர்களின் பெற்றோர்களிடம் 2025-26 கல்வியாண்டுக்கான கட்டணம் வசூல் செய்துள்ளார்.
Advertisement
