திருத்துறைப்பூண்டி: காவல் நிலையத்துக்கு தீ வைப்பதாக மதுபோதையில் மிரட்டல் விடுத்த சினிமா துணை நடிகர்கள் கைதுசெய்யப்பட்டனர். பாண்டி கோட்டகம் பகுதியில் ஓவரூர் பகுதியைச் சேர்ந்த சினிமா துணை நடிகர்களான பாரதிராஜா, பாரதமணி ரகளையில் ஈடுபட்டனர். ECR சாலையில் மது போதையில் நின்று வெடி வெடித்தும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. தட்டிக்கேட்ட காவலர் தனபாலிடம் வாக்குவாதம் செய்ததுடன், எடையூர் காவல் நிலையத்தை கொளுத்தி விடுவோம் என மிரட்டல் விடுத்தனர்.
Advertisement


