ஓராண்டு முதுகலை சட்டப் படிப்பு படித்தவர்கள் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : ஐகோர்ட்
சென்னை : ஒராண்டு முதுகலை சட்டப் படிப்பு படித்தவர்கள் சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதியளித்து உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இடைக்கால உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழக அரசின் உயர் கல்வித் துறை, சட்டத்துறை பதிலளிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.


