ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய இருக்கும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தருணம் : ஐகோர்ட் யோசனை
சென்னை : ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தடையாக இருக்கும் விதிகளை தமிழ்நாடு அரசு மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் யோசனை கூறியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் உள்ள ராஜ்குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.


