Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கார் பார்க்கிங் தகராறு: நடிகர் தர்ஷன் மீதான பதியப்பட்ட வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்

சென்னை: கார் பார்க்கிங் தகராறு தொடர்பாக நடிகர் தர்ஷன், நீதிபதியின் மகன் தரப்புக்கு இடையே சமரசம் ஏற்பட்டதால் இரு தரப்பினருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ஐகோர்ட் ரத்து செய்தது. கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக தர்ஷனுக்கும் நீதிபதியின் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நண்பருடன் சேர்ந்து தர்ஷன் தங்களை தாக்கியதாக நீதிபதியின் மகன் தரப்பிலும், நடிகர் தர்ஷன் தரப்பிலும் புகார் எழுந்தது. சமரசம் ஏற்பட்டதால் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி இரு தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது.