“அபாயங்களை கடந்து சட்டவிரோதமாக குடியேற முயல்வது அவ்வளவு மதிப்பு மிக்கதல்ல..” : அமெரிக்க தூதரக அதிகாரி கருத்து
வாஷிங்டன் : “குடியேற்ற விதிகளை கடுமையாக்கி சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்க அரசு நாடு கடத்தி வருகிறது. அபாயங்களை கடந்து அங்கு குடியேறும் அளவுக்கு முயற்சி எடுப்பது மதிப்பு மிக்கதல்ல" என்று அமெரிக்க தூதரக அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் 205 பேர் டெக்சாஸில் இருந்து விமானம் மூலம் இன்று திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

