மும்பை: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 10 சதவீதம் முதல் 29 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து பங்குகள் விலை கடும் சரிவடைந்தது. அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவன பங்கு விலை 10 சதவீதம் சரிந்துள்ளது. அதானி போர்ட் பங்கு விலையும் 10 சதவீதத்துக்கு மேல் சரிந்து வர்த்தகமாகிறது. அதானி பவர் நிறுவன பங்கு விலை 11 சதவீதம் சரிவு ஆன நிலையில் அதானி எனர்ஜி நிறுவன பங்கு விலை 20 சதவீதம் சரிவடைந்தது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு விலை 16 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலை 12 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை 28 சதவீதம் சரிந்துள்ளது.
Advertisement

