சென்னை: நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா முன் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. மராட்டிய துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் நடிகர் குணால் கம்ரா மனு தாக்கல் செய்திருந்தார். விழுப்புரத்தில் வசித்து வருவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையில் மும்பை உயர் நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியதால் குணால் கம்ரா மனு முடித்து வைத்து ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
Advertisement
