கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், மாத்காரியா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு சேதமடைந்தது. அதில் தூங்கிக்கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. தம்பதியின் மகன் காயமடைந்தார்.
அவர் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் ஒருவர் தினக்கூலி தொழிலாளி என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.



