Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேஒய்டி ஆர்1ஆர் ஹெல்மெட்

கேஒய்டி நிறுவனம், புதிய ஆர்1ஆர் என்ற ஹெல்மெட்டை அறிமுகம் செய்துள்ளது. 3 விதமான அளவுகளில் இது கிடைக்கும். மீடியம் அளவு ஹெல்மெட் 1,550 கிராம் எடை கொண்டது. அசத்தல் கிராபிக்ஸ்களுடன் ஸ்போர்ட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்டையை இணைக்க இரட்டை டி-ரிங் இடம் பெற்றுள்ளது. தாடைப் பகுதியிலும், நெற்றி மற்றும் தலைப்பகுதியிலும் காற்று செல்லத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள துணி வெப்பம், ஈரப்பதம் ஆகியவற்றை தாக்குப்பிடிக்கும் வகையிலும், வாகனம் ஓட்டுபவருக்கு சவுகரியமான விதத்திலும் இருக்கும் என நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் துவக்கவிலை சுமார் ரூ.39,000.