சென்னை: இயக்குநர் பிரபுசாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி-2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பிரபுசாலமன் தயாரித்து இயக்கியுள்ள கும்கி-2 திரைப்படம் நவ.14ல் வெளியாக உள்ளது. கும்கி-2 படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் வழக்கு தொடர்ந்தார். கும்கி-2 படத்துக்கு பிரபுசாலமன் வாங்கிய ரூ.1.5 கோடியை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கும்கி-2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
+
Advertisement
