கேடிஎம் நிறுவனம், புதிய 490 டிவின் சிலிண்டர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. 500 சிசிக்கு உட்பட்ட இன்ஜின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிளாக இது இருக்கும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது. 490 மோனிகர், 490 டியூக் மற்றும் 490 அன்வன்சர் ஆகிய மாடல்களில் உள்ள அம்சங்கள் இதில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இன்ஜின்கள், புனேயில் உள்ள பஜாஜ் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த புதிய வரிசை மோட்டார் சைக்கிள்கள் அடுத்த ஆண்டு இத்தாலியில் மிலனில் நடைபெறும் மோட்டார் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், அதன்பிறகு சந்தைப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


