கேடிஎம் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட 990 ஆர்சி ஆர் டிராக் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 947 சிசி பேரலல் டிவின் எல்சி8சி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 135 எச்பி பவரையும், 105 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஸ்டாண்டர்டு வேரியண்டுடன் ஒப்பிடுகையில் இந்த இன்ஜின் வெளிப்படுத்தும் திறன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ரேசிங் கியர் பாக்ஸ், மிச்சலின் பவர் ஸ்லீக் டயர்கள், டபிள்யூபி ஏபிஎக்ஸ் சஸ்பென்ஷன், இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
+


