கேடிஎம் நிறுவனம் 2027ம் ஆண்டுக்கான மாடலாக 450 ரேலி ரெப்ளிகா மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. லிமிடெட் எடிஷனான இது 100 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட இருக்கின்றன. இதில் 449.4 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இது எவ்வளவு பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும் என்ற விவரத்தை நிறுவனம் வெளியிடவில்லை. பிரம்போ ஹைடராலிக் கிளட்ச் இடம் பெற்றுள்ளது. அலுமினியம் டேப்பர்டு ஹாண்டில் பார்கள், 9 லிட்டர் முன்புற பெட்ரோல் டேங்க் மற்றும் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட பி்ன்புற பெட்ரோல் டேங்க் என இரண்டு டேங்குகள் இடம் பெற்றுள்ளன. டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. அசத்தலான தோற்றத்தில் இந்த ரேசர் மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. விலை விவரம் வெளியிடப்படவில்லை.
+
Advertisement
