Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மே மாதத்திலேயே 100 அடி தொட்ட கே.ஆர்.எஸ் அணை

மண்டியா: மலைநாடு மாவட்டமான குடகு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணா தாலுகாவில் உள்ள கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 4 நாட்களில் 11 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக, பல ஆண்டுகளுக்கு பின்னர் மே மாதத்திலேயே கேஆர்எஸ் அணை 100 அடியை எட்டியுள்ளது. பருவமழைக்கு முன்னர் கேஆர்எஸ் அணையில் 89 அடி தண்ணீர் இருந்தது. தற்போது கேஆர்எஸ் அணைக்கு 22,788 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்திலேயே அணை நிரம்பும் வாய்ப்புள்ளது.