டெல்லி : குறைவான பயண தூரம், போதிய மக்கள் பயன்பாடு இருக்காது என்ற காரணங்களால் கோவை, மதுரை மெட்ரோ ரயில் நிலையத் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு கொடுத்த மெட்ரோ திட்ட அறிக்கைகளை திருப்பி அனுப்பியது குறித்து மாநிலங்களவை திமுக எம்.பி., கனிமொழி NVN.சோமு எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.


