தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை; காற்றாடி, மாஞ்சா நூல் தயாரிப்பு:கொரட்டூரில் குடோனுக்கு சீல்: உரிமையாளர் கைது
இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி அமைந்தகரை பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம்(42) கைது செய்தனர். பின்னர் அவரது கடையில் சோதனை நடத்தி விற்பனைக்கு வைத்திருந்த காற்றாடி, மாஞ்சா நூல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், அண்ணாநகர் உதவி ஆணையர் முனுசாமி தலைமையில் தனிப்படை அமைத்து காற்றாடி, மாஞ்சா நூல் தயாரிக்கும் கும்பல் பற்றி விசாரித்தனர். இதில் கொரட்டூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் காற்றாடி, மாஞ்சா நூல் தயார்செய்து கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது.
இதையடுத்து நேற்றிரவு தனிப்படை போலீசார் சென்று கொரட்டூர் வெங்கட்ராமன் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(48) என்பவரை கைது செய்து அவரது குடோனில் சோதனை நடத்தி அங்கு பதுக்கிவைத்திருந்த காற்றாடி,மாஞ்சா நூல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன்பின்னர் ரமேஷை, அண்ணாநகர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இவர், அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், திருமங்கலம், முகப்பேர், சூளைமேடு மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்துள்ளார் என்று தெரியவந்துளள்ளது. இதையடுத்து குடோனுக்கு சீல் வைத்தனர்.