Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொள்ளிடம் ஆற்றின் கரையில் படுத்திருந்த 12 அடி முதலையை வெறும் கைகளால் பிடித்த மக்கள்: தோளில் போட்டு சென்ற வீடியோ வைரல்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர், பழைய நல்லூர், அகரநல்லூர், வல்லம்படுகை, வேலக்குடி, வையூர், கண்டியாமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளை ஒட்டி பழைய கொள்ளிடம் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன. குறிப்பாக சில ஆண்டுகளாகவே பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க செல்லும் பொதுமக்களை முதலைகள் கடித்து இழுத்து சென்று கொன்று விடுகின்றன.

இந்நிலையில் காட்டுக்கூடலூர் கிராமத்தில் அவ்வப்போது கிராம மக்களை மிரட்டி வந்த சுமார் 400 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட முதலை நேற்று முன்தினம் கரையில் படுத்திருந்தது. அப்போது அந்த பக்கமாக சென்ற சிறுமி, இதை பார்த்து கூச்சலிட்டாள். உடனடியாக அங்கு திரண்ட கிராம மக்கள், கரையில் படுத்திருந்த முதலையை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மடக்கி பிடித்தனர். பின்னர் முதலையின் கால்கள் மற்றும் வாயை கட்டி தோளில் தூக்கி சென்று, மினிவேனில் ஏற்றி சென்று வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.