டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக ஆடிய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, 47 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்களை குவித்தார். இதன் மூலம், டெல்லி அணிக்கு எதிராக அதிகபட்சமாக, 1130 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் ஒட்டுமொத்த அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்களை குவித்த வீரராக டேவிட் வார்னர் திகழ்கிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகளில் அவர் 1134 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார்.
தவிர, ஐபிஎல் அணிகளில் அடுத்ததாக, பஞ்சாப் அணிக்கு எதிராகவும், கோஹ்லி, 1104 ரன்களை குவித்துள்ளார்.
மேலும், சென்னைக்கு எதிராக 1084, கொல்கத்தாவுக்கு எதிராக 1021, மும்பைக்கு எதிராக 922 ரன்களை கோஹ்லி குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோஹ்லியின் சாதனை மகுடத்தில் மற்றுமொரு வைரமாக, டெல்லி அணிக்கு எதிராக அதிகபட்சமாக 11 முறை 50 ரன் குவித்த வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.

