கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை
03:23 PM May 26, 2025 IST
Share
Advertisement
திண்டுக்கல்: கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா பயணியின் வாகனத்தை வியாபாரி ஒருவர் தாக்கிய வீடியோ வைரலானதை அடுத்து போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ள க்யூ ஆர் கோடு மூலம் சுற்றுலா பயணிகள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.