Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

டிச. 1 முதல் கொடைக்கானல் மலைச் சாலையில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள வாகனங்களுக்கு தடை!

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைச் சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

இதன்படி, 12 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட பயணிகள் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மலைச் சாலையில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறுகலான மற்றும் வளைவுகள் நிறைந்த கொடைக்கானல் மலைச் சாலைகளில், அதிக நீளமுள்ள வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கவும், விபத்துகளைத் தடுத்துப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள், பெரிய வாகனங்களுக்குப் பதிலாகச் சிறிய வேன்கள், பேருந்துகள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், இந்த தடைகளை மீறிவரும் வாகனங்கள் மலை அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.