பணி: வொர்க்மேன். மொத்த காலியிடங்கள்: 210.
டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. வெல்டர் கம் பிட்டர் (வெல்டர்/ வெல்டர் கம் கேஸ் எலக்ட்ரிக்): 40 இடங்கள் ( பொது-21, ஒபிசி-11, எஸ்சி-4, பொருளாதார பிற்பட்டோர்-4).
2. வெல்டர் கம் பிட்டர் (ஷீட் மெட்டல் வொர்க்கர்): 56 இடங்கள் ( பொது-36, ஒபிசி-8, எஸ்சி-6, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-5).
3. வெல்டர் கம் பிட்டர்: 33 இடங்கள் (பொது-19, ஒபிசி-8, எஸ்சி-3, பொருளாதார பிற்பட்டோர்-3).
4. வெல்டர் கம் பிட்டர் (பிளம்பர்): 5 இடங்கள் (பொது-4, எஸ்டி-1)
5. வெல்டர் கம் பிட்டர் (மெக்கானிக் மோட்டார் வெஹிக்கிள்): 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)
6. வெல்டர் கம் பிட்டர் (மெக்கானிக் டீசல்): 14 இடங்கள் (பொது-10, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1)
7. மிஷினிஸ்ட்: 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1)
8. பிட்டர் (எலக்ட்ரிக்கல்): 17 இடங்கள் (பொது-11, ஒபிசி-3, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-1)
9. பிட்டர் (எலக்ட்ரானிக்ஸ்): 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1)
10. கிரேன் ஆபரேட்டர் (எலக்ட்ரிக்கல்): 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1)
11. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்: 7 இடங்கள் (பொது-5, ஒபிசி-2).
12. ஷிப்ரைட் வுட்: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்டி-1).
13. பெயின்டர்: 9 இடங்கள் (பொது-5, ஒபிசி-3, எஸ்சி-1).
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து, அப்ரன்டிஸ் பயிற்சி பெற்று, குறைந்தது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 23.01.2026 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: ரூ.700 மட்டும். இதை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு கட்டணம் கிடையாது.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, குவாண்டிடெட்டிவ் அப்டிடியூட் ஆகிய பாடப்பிரிவுகளிலிருந்தும், ஐடிஐ பாடத்திலிருந்தும் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வு தொடர்பான விவரங்கள் இ. மெயிலில் தெரிவிக்கப்படும்.
www.cochinshipyard.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.01.2026.


