புதுடெல்லி: நகராட்சி நிர்வாக துறையில், 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு 634 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்யும்படி, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்தின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, தனது தரப்பு வாதங்களை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரியும், முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, தற்போதைய அரசு வாபஸ் பெற முடியாது எனவும், அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை எனக் கூறி கே.என்.நேரு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் மேற்கண்ட உயர் நதிமன்ற உத்தரவுக்கு எதிராக கே என் நேரு தாக்கல் செய்து இருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கர் தாத்தா மற்றும் ஷூல் நகு ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


