கேகேஆர் பயிற்சியாளராக டிம் சவுத்தீ நியமனம்
கொல்கத்தா: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் பயிற்சியாளராக, நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு ஜாம்பவான் டிம் சவுத்தீ நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. டிம் சவுத்தீ, கடந்த 2021-23 ஆண்டுகளில் கொல்கத்தா அணிக்காக ஆடியுள்ளார். அவர், நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் 15 ஆண்டுகளாக ஆடிய அனுபவம் உள்ளவர். 100 டெஸ்ட், 150 ஒரு நாள், 120 டி20 போட்டிகளில் ஆடியுள்ள சவுத்தீ, சர்வதேச கிரிக்கெட்டில் 700க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
Advertisement
Advertisement