Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பட்டம் துரத்தியபோது நேர்ந்த பயங்கர விபத்து; ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் மீட்பு

அல்வார்: நாடு முழுவதும் மூடப்படாத மற்றும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளால் குழந்தைகள் தவறி விழும் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராம்கர் பகுதிக்குட்பட்ட புடோலி கிராமத்தைச் சேர்ந்த சீஷ்ராம் என்பவரது மகன் பானு (10), அப்பகுதியில் அறுந்து காற்றில் பறந்துவந்த பட்டம் ஒன்றை எடுப்பதற்காக விவசாய நிலத்தை நோக்கி வேகமாக ஓடினான். அப்போது அந்த நிலத்தில் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த சுமார் 300 அடி ஆழ்துளை கிணற்றின் மீது வைக்கப்பட்டிருந்த கல் லேசாக விலகி இருந்ததை அறியாமல் ஓடிய சிறுவன், எதிர்பாராதவிதமாக அந்தக் குறுகிய குழியில் தவறி விழுந்து சுமார் 50 முதல் 55 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டான்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உடனடியாக 2 ஜேசிபி எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, ஆழ்துளை கிணற்றின் அருகிலேயே மற்றொரு பெரிய பள்ளம் தோண்டும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுவன் பானு எந்தவித ஆபத்துமின்றி பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட்டதால் அவனது குடும்பத்தினரும் கிராம மக்களும் பெருமூச்சு விட்டனர்.