Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நார்வே மன்னர் 5ம் ஹரால்ட் காலமானார்

ஸ்டாவாங்கர்: நார்வே நாட்டு மன்னர் 5ம் ஹாரால்ட் நேற்று காலமானார். நார்வே நாட்டின் ஓஸ்லோவுக்கு அருகே உள்ள அஸ்கர் என்ற இடத்தில் 1937ம் ஆண்டு பிறந்தவர் ஹரால்ட். இவர் கடந்த 1370ல் நான்காம் ஓலாவ் மன்னருக்கு பிறகு, அதாவது 567 ஆண்டுகளில; நார்வேயின் சொந்த மண்ணில் பிறந்த முதல் இளவரசர் என்ற பெருமைக்குரியவர். 1991 ஜனவரியில் தனது தந்தை ஐந்தாம் ஓலாவ் மன்னருக்கு பிறகு அரியணை ஏறினார்.

35 ஆண்டுகளுக்கும் மேலான தனது ஆட்சி காலத்தில் நார்வே முடியாட்சியை நவீன மயமாக்கினார். கடந்த சில தினங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தனது 89வது வயதில் நேற்று காலமானார். இதையடுத்து அவரது மகன் ஹாகேன் பட்டத்து இளவரசராக பதவி ஏற்க உள்ளார்.