Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மன்னர் பூலித்தேவரின் தியாகம், வீரத்தை போற்றுவோம்..! திமுக புகழாரம்

சென்னை: மறைந்த மன்னர் பூலித்தேவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், " ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மண்ணின் மாவீரர் பூலித்தேவரின் பிறந்த நாள் இன்று. அடிமைத்தனத்தை வீழ்த்திட வீறுகொண்டு எழுந்த பூலித்தேவரின் வீரத்தைப் போற்றுவோம். அவர் புகழ் ஓங்கட்டும்! பூலித்தேவரின் வீரத்தைப் போற்றுவோம்!" என குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி எம்.பி தந்து வாழ்த்து செய்தியில் "ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் தெற்கிலிருந்து வீர முழக்கமிட்ட நெற்கட்டான் செவலின் மாவீரர் மன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது வீரத்தையும், தியாகத்தையும், விடுதலை வேட்கையையும் போற்றுவோம். அம்மாவீரரின் வரலாறு என்றும் நமக்கு உத்வேகம் அளிக்கட்டும்" என்று பதிவிட்டு உள்ளார்.