Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து விதிமீறல்: 8 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்!

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், விதிமீறல்களில் ஈடுபட்ட 8 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகை கால நெரிசலைப் பயன்படுத்தி, பேருந்து நிலையத்திற்குள் வராமல் சென்னையின் வெளிப்பகுதிகளிலும், ஜி.எஸ்.டி (GST) சாலை ஓரங்களிலும் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்திப் பயணிகளை ஏற்றி சென்றுள்ளனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

பேருந்து முனையத்திற்குள் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என அதிகாரிகள் பல முறை எச்சரித்தும்

விதிமீறல் தொடர்ந்ததால் அதிரடி ஆய்வு மேற்கொண்டு 8 ஆம்னி பேருந்துகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் நடுவழியில் இறக்கிவிட பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பயணிகள் சொத ஊர்களுக்கு செல்லும் வைகையில் எவ்வித சிரமமும் இன்றி தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல போக்குவரத்துத் துறை சார்பில் உடனடியாக மாற்றுப் பேருந்து வசதிகளை ஏற்படுத்தப்பட்டது.

பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், உரிய அனுமதியின்றி இயக்கப்படும் பேருந்துகளைக் கண்டறியவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கிளாம்பாக்கம் மற்றும் சென்னை எல்லையோரப் பகுதிகளில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.