Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

கியா சோனட் ஆட்டோமேட்டிக்

கியா இந்தியா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட சோனட் காம்பாக்ட் எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகள் உள்ளன. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் 116 எச்பி பவரையும் 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் தற்போது எச்டிஇ (ஓ) வேரியண்டில் இருந்தே 6 ஸ்பீடு டார்க்யூ கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதன் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.9.78 லட்சம். இதற்கு அடுத்த எச்டிகே (ஓ), எச்டிகே பிளஸ் மற்றும் எச்டிகே பிளஸ் (ஓ) வேரியண்ட்களிலும் இந்த கியர் பாக்ஸ் உள்ளது. இதுபோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 120 எச்பி பவரையும் 172 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் எச்டிகே (ஓ) வேரியண்டில் இருந்தே கிடைக்கும். இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.9.89 லட்சம். இதுபோல் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 81 எச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சோனட்டில் துவக்க நிலை வேரியண்ட்களிலேயே 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார்கள் இடம் பெற்றிருக்கும். எச்டிகே பிளஸ் வேரியண்டில் 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே, ரியர் கேமரா, குரூஸ் கண்ட்ரோல் சேர்க்கப்பட்டுள்ளன. மேற்கண்ட மாற்றங்கள் மூலம் ரூ.10 லட்சம் ஷோரூம் விலைக்குள்ளாகவே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களை கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.