Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செக் மோசடி வழக்கில் கேரள எம்எல்ஏவுக்கு ஒரு வருடம் சிறை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலா தொகுதி சுயேட்சை எம்எல்ஏவாக இருப்பவர் மாணி சி.காப்பன். கடந்த 2010ம் ஆண்டு கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தின் பங்குகளை வாங்கித் தருவதாக கூறி மும்பைதொழிலதிபர் தினேஷ் மேனன் என்பவரிடம் இருந்து ரூ. 3.25 கோடி பணம் வாங்கினார்.

பங்குகளை கொடுக்காததால் தினேஷ் மேனன் தன்னுடைய பணத்தை திருப்பிக் கேட்டார். அவருக்கு மாணி சி. காப்பன் கொடுத்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாததால் திரும்பிவிட்டன. இது தொடர்பான வழக்கில் மாணி சி. காப்பனுக்கு மும்பை நீதிமன்றம் 1 வருடம் சிறையும், ரூ. 5.30 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டது.