நீண்டகாலம் உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
Advertisement
கேரள முதல்வரும் எனது அன்பு தோழருமான பினராயி விஜயனுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். முற்போக்கான அரசு நிர்வாகத்தின் மீதான தங்களது அர்ப்பணிப்பும், கூட்டாட்சியியல் மற்றும் மதச்சார்பின்மை மீதான நமது உறுதிப்பாடும் தமிழ்நாடு - கேரள உறவினை வலுப்படுத்துகின்றன. நமது இரு மாநிலங்களும் இணைந்து நின்று நமது பண்பாட்டு உறவுகளையும் பொதுவான இலக்குகளையும் போற்றுவோம்! தாங்கள் நீண்டகாலம் உடல்நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன்.
Advertisement