Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்னும் 6 நாட்களில் தொடங்குகிறது கத்திரி

சென்னை: கத்திரி வெயில் காலம் மே 4ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரையிலும் நீடிக்கும் என்பதால், தமிழகத்தில் வெப்பம் மற்றும் வெயில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதற்கிடையே குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.

மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்று சந்திக்கும் பகுதியும் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும்.