Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

காஷ்மீர் என்கவுன்டர்: 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில் இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உடனே பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கியை கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.