காசியை போல் தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் தமிழ் சங்கமம் நடத்த பிரதமருக்கு பரிந்துரை: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
Advertisement
இதுபோல் தமிழகத்துக்கு காசியுடன் கலாச்சார ஈர்ப்பும் உறவும் உள்ளது. இதனால் தான் காசியில் தமிழ் சங்கமம் நடத்த பிரதமர் முடிவு செய்தார் என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பூடான், கொலம்பியா, ஈராக், ஜமைக்கா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகள் தமிழ்ச் சங்கமம் மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை குறித்து தங்கள் கருத்துகளையும் வியப்பையும் வெளிப்படுத்தினர். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவது போல், ராமேஸ்வரத்தில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுமா என்று கேட்டதற்கு ஜெய்சங்கர் இதுகுறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பதிலளித்தார்.
Advertisement