Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

"அதிகார துஷ்பிரயோகம்" என்றே வரலாறு பதிவு செய்யும் - கரூரில் பலியானோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க இ.கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

சென்னை: கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி-யான சுப்பராயன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். முன்னதாக கடந்த 2025 செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இப்போது தவெக அரசு அமைந்துள்ள நிலையில், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களில் ஒருவருக்கு முதற்கட்டமாக 32 பேருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக எக்ஸ் தலத்தில் பதிவிட்டிருக்கும் எம்.பி சுப்பராயன், அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசு வேலை வழங்குவது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும், இது கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்

குறிப்பாக சொல்வதென்றால் தவெக அரசின் இந்த முடிவை "அதிகார துஷ்பிரயோகம்" என்றே வரலாறு பதிவு செய்யும். இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்மந்தப்பட்ட கட்சிகளை மட்டுமே சார்ந்ததாகும். அவை தான் அதை செய்ய வேண்டும். அந்த பொறுப்பை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது எனவும் அவர் காட்டமாக தெரிவித்து உள்ளார்.