Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கரூரில் ரூ.2,500 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதிப்பு!

மதுரை: கரூரில் ரூ.2,500 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு கோயில்களுக்கு சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்கள் சுமார் ரூ.2,500 கோடி மதிப்பிலானவை ஆகும். கோயில் நிலங்களை தனிநபர்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யக் கூடாது என ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர் மாவட்ட ஆட்சியர் அந்த தடையை நீக்கியதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து, சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கோயிலுக்கு சொந்தமான இடங்களை தனிநபர்களின் பெயரில் பதிவு செய்யக் கூடாது என வாதிடப்பட்டது.

இதற்கிடையே, நிலங்களைப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் ஏழை மக்கள் தங்களது சிறுக சேமிப்பை கொண்டு வாங்கிய நிலங்கள், இதுபோன்ற அனுமதிகளால் வீணாகிவிடும் சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து அரசு மற்றும் கோயில் தரப்பினர் பதிலளிக்க கால அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.