கர்நாடக அரசின் செயலை தடுக்க வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நீர் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுவதற்கும் பல்வேறு மாவட்ட மக்களுக்கு குடிநீராகவும் பயன்படுகிறது. குறிப்பாக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் ஒழுங்காற்று ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் தமிழக அரசு மேகதாது அணை சம்பந்தமாக தமிழகத்திற்கு காவிரி நீரின் உரிமையை நிலைநாட்டும் வகையில் எடுத்துக்கூற வேண்டும். எனவே தமிழக அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
Advertisement
Advertisement