காரைக்குடி: காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். பத்திரப்பதிவு சார் பதிவாளர் முத்துப்பாண்டி (பொறுப்பு), அலுவலக எழுத்தர் புவனபிரியாவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்குடி கண்டனூர் ரோட்டை சேர்ந்த வைரவேல் என்பவரிடம் லஞ்சமாக 60,000 வாங்கும்போது கையும் களவுமாக பிடித்த போலீசார் விசாரணை என தகவல் வெளியாகியுள்ளது.
+
Advertisement


