Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முடிச்சு விட்டீங்க போங்க: கரையும் அமமுக டிடிவி ஜூட்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர். தொடர்ந்து தனியார் மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் நேற்று காலை 8:30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக கட்சியின் நிர்வாகிகள் கூறினர். இதனால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த செய்தியாளர்கள் காலை 8 மணிக்கே அங்கு வந்து காத்திருந்தனர்.

ஆனால் 4 மணி நேரம் தாமதமாக வந்த டிடிவி தினகரன் நேராக மணமேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவரை, பத்திரிகையாளர்கள் குறுக்கிட்டு மண்டப மேல் மாடியில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு தங்களது அனுமதியுடன் அமமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருப்பது குறித்து கேட்டனர். அதற்கு பதில் கூறாத டிடிவி தினகரன், அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அமமுகவினர், ஏற்கனவே பல்டி கூட்டணியால் கட்சி கரைந்து வருகிறது. பத்திரிகையாளர்களிடமும் இப்படியா? என முணுமுணுத்ததை மண்டபத்தில் கேட்க முடிந்தது.