Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குமரியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

நாகர்கோவில்: நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இன்று நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரியில் இருந்து கிளம்பி காலை 10.15 மணியளவில் நாகர்கோவில் பறக்கை விலக்கு சந்திப்பில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்காக அமைக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி பெபின் ஆன்றோ, பறக்கும் படை அதிகாரி சுஷ்மா ஆகியோ தலைமையிலான கொண்ட குழுவினர் முதலமைச்சர் வாகனத்தை தடுத்து நிறுத்தி, தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி சோதனை செய்ய வேண்டும் என்று கூறினர்.

உடனே சோதனை செய்யுங்கள் எனக் கூறிவிட்டு முதலமைச்சர் வாகனத்தில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் வாகனத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.இந்த சோதனையின் போது வாகனத்தில் இருந்து கீழே இறங்கி நின்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் படம் எடுத்துக் கொண்டனர். அவர்கள் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள் 200 தொகுதிகளில் கண்டிப்பாக திமுக வெற்றி பெறும் என்று தெரிவித்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார். பின்னர் சோதனை முடிந்து மீண்டும் முதலமைச்சர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.