Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கண்ணூர் அருகே காகங்களுக்கு பறவைக் காய்ச்சல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிட்டி அருகே உள்ள எடக்கானம் என்ற இடத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏராளமான காகங்கள் இறந்து கிடந்தன. இதுகுறித்து அறிந்த கால்நடை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்தக் காகங்களின் ரத்த மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பரிசோதனையில் இறந்து கிடந்த காகங்களுக்கு எச்5 என்1 என்ற பறவைக் காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. கிடந்த காகங்களுக்கும் பறவைக்காய்ச்சல் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காகங்களில் இருந்து இந்தக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கண்ணூர் மாவட்ட கலெக்டர் அருண் கே. விஜயன் தெரிவித்துள்ளார்.