அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக 5வது முறையாக கண்ணையா தேர்வு
Advertisement
12 லட்சம் ரயில்வே தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற, அங்கீகரிக்கப்பட்ட சம்மேளனமாக இது உள்ளது. அகில இந்திய ரயில்வே சம்மேளனம் 1923ல் துவங்கப்பட்டு, 100 ஆண்டு காலத்தை கடந்து, 101வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பொது மகா சபை மற்றும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள், கடந்த 23 முதல் 25ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 5வது முறையாக அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Advertisement