Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

இளைஞர்களை சாக்கடை தலைமுறை என்று கூறிய கங்கனாவின் பாவங்களை மூடி மறைக்க வேண்டுமா?.. நடிகையான பாஜக எம்பி மீது ராம்தேவ் ஆவேசம்

புதுடெல்லி: இளைஞர்களை சாக்கடை தலைமுறை என விமர்சித்த பாஜக எம்.பி. கங்கனா ரணாவத்தின் கருத்து கெட்டுப்போன மனதின் அடையாளம் என யோகா குரு பாபா ராம்தேவ் கடுமையாக சாடியுள்ளார். பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத், சமீபத்தில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இளம் தலைமுறையினரான ‘ஜென் ஸி’ இளைஞர்களை ‘சாக்கடை தலைமுறை’ என்று அவர் கடுமையாக சாடியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரபல யோகா குருவும், தொழிலதிபருமான பாபா ராம்தேவ் கங்கனாவுக்கு எதிராக கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ‘இளைஞர்களை சாக்கடை என்று அழைப்பது கெட்டுப்போன மனதின் அடையாளம் ஆகும். கங்கனாவின் சிறுவயது வாழ்க்கை மற்றும் பின்னணி எப்படிப்பட்டது என்பது பற்றி எனக்குத் தெரியும். நாட்டின் சக்தியாக விளங்கும் இளைஞர்களை இவ்வாறு பேசுவது தவறான விஷயம். அவரது இந்த பேச்சு குறித்து பாஜக தலைமை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கொந்தளிப்புடன் தெரிவித்தார்.

பேட்டியின் போது, கங்கனா உங்களின் யோகா முறைகளை பின்பற்றுபவர் என்று நிருபர் சுட்டிக்காட்டியதற்கு பதிலளித்த பாபா ராம்தேவ், ‘ஒருவர் எனது யோகாவைப் பாராட்டுகிறார் என்பதற்காக அவர்களின் பாவங்களை நான் மூடி மறைக்க வேண்டுமா? சாதி, மதங்களை கடந்து இன்றைய இளைஞர்களிடம் அளப்பரிய சக்தி இருக்கிறது’ என்று காரசாரமாக கூறினார்.