Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 121 அப்ரன்டிஸ்கள்

பயிற்சிகள்:

1. டிரேட் அப்ரன்டிஸ்: 91 இடங்கள். (பிட்டர்-29, மிஷினிஸ்ட்-4, டர்னர்-1, வெல்டர்-12, டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்)-1, எலக்ட்ரீசியன்-25, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-6, எலக்ட்ரானிக் மெக்கானிக்-4, கார்பென்டர்-1, பிளம்பர்-1, மேசன்-1, டிராப்ட்ஸ்மேன் (சிவில்)-3, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டென்ட்-3.) தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. டிப்ளமோ அப்ரன்டிஸ்: 14 இடங்கள். ( மெக்கானிக்கல்-7, எலக்ட்ரிக்கல்-4, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன்-2, சிவில்-1). தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

3. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: (இன்ஜினியரிங் அல்லாதது): 16 இடங்கள்.

(மனிதவளம்- 7, கான்ட்ராக்ட்ஸ் மற்றும் மெட்டீரியல் மேனேஜ்மென்ட்-3, பைனான்ஸ் மற்றும் அக்கவுன்ட்ஸ்-2, ஹெச்பியூ-2, கெமிக்கல் லேப்-2). தகுதி: கலை/அறிவியல்/வணிகவியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டாம்.

ஐடிஐ/டிப்ளமோ/பட்டப்படிப்பு ஆகியவற்றை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

ஐடிஐ/டிப்ளமோ/ பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அணுமின்நிலையத்தில் ஒரு வருட பயிற்சியும் வழங்கப்படும்.

ஐடிஐ படித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்திலும், டிப்ளமோ/பட்டப்படிப்பு படித்தவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளத்திலும் தங்களது கல்வித்தகுதியை முன்பதிவு செய்து விட்டு www.npcil.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றுகளின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Madras Atomic Power Station,Kalpakkam- 603 102,

Chengalpattu,Tamilnadu.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.04.2025.