பயிற்சி: டிரேடு அப்ரன்டிஸ். மொத்த காலியிடங்கள்: 50.
டிரேடு வாரியாக காலியிடங்கள் விவரம்: (பிட்டர்-10, எலக்ட்ரீசியன்-10, டிஜிட்டல் போட்டோகிராபர்-1, கெமிக்கல் பிளான்ட் மெக்கானிக்-10, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்-10, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட்-3, மிஷினிஸ்ட்-1, ஏசி மெக்கானிக்-3, டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்)-2).
வயது: 16.03.2026 தேதியின்படி 16 முதல் 24க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
உதவித் தொகை: ரூ.9,600.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள், கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் கல்வி தகுதியை பதிவிட்ட பின்னர் www.bhaviin.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.03.2026.


